சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர போக்குவரத்து பணிகளுக்காக 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவப்படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.