புயல் காரணமாக சீனாவின் ஷாங்காய் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புயல் காரணமாக சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.