21 
news

நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த பயணிகள் விமானம்... 10 நிமிடம் பைலட் இல்லாமல் பறந்ததாக அதிர்ச்சி தகவல்

ஸ்பெயினில் கடந்தாண்டு பிப்ரவரியில் லுஃப்தான்சா ((Lufthansa ))விமானம் நடுவானில் விமானியின் கட்டுப்பாடு இல்லாமல் 10 நிமிடம் 200 பயணிகளுடன் பறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

ஸ்பெயினில் கடந்தாண்டு பிப்ரவரியில் லுஃப்தான்சா ((Lufthansa ))விமானம் நடுவானில் விமானியின் கட்டுப்பாடு இல்லாமல் 10 நிமிடம் 200 பயணிகளுடன் பறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி பிராங்பர்ட்டிலிருந்து ((Frankfurt))ஸ்பெயினின் செவில்லுக்கு ((Seville))லுஃப்தான்சா விமானம் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 205 பேருடன் புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தலைமை விமானி கழிவறைக்கு சென்ற போது,

துணை விமானி திடீரென மயங்கியதாகவும் எனினும் ஆட்டோபைலட் மூலம் விமானம் 10 நிமிடம் விமானியின் கட்டுப்பாடு இன்றி பறந்ததாகவும் ஜெர்மன் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.