today morning share market 
news

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

வீழ்ச்சியுடன் தொடங்கிய வர்த்தகம்

Azhagiri Arumugam

வளைகுடா போரால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,700 புள்ளிகளும் நிப்டி 550 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் ஆனது.

சென்செக்ஸ் சதவிகிதம் கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகள், இன்று மார்ச் 19ஆம் தேதி காலை, கடும் வீழ்ச்சி உடன் தொடங்கி, வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 2.55 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 550 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை ஆரம்பித்து வைத்தது. காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 75,045.97 புள்ளிகளில் வர்த்தகமானது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே, லாபத்துடன் வர்த்தகமானது. பல நிறுவனங்களின் பங்குகள், சரிவுடன் வர்த்தகமானது.

இந்த வாரத்தில்...
இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக மார்ச் 19ஆம் தேதி, சரிவை சந்தித்தது.

எரிபொருள் உற்பத்தி பாதிப்பு
கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தி ஆலையில் தீப்பற்றி பெரும் சேதம் ஏற்பட்டது. வளைகுடா நாடுகள் எரிபொருள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 110 டாலரைக் கடந்து விட்டது. இந்த நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தது.