10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளராமல் அடுத்தடுத்த தேர்வுகளை பயன்படுத்தி கொண்டு தேர்ச்சி பெறுங்கள் எனவும் உத்வேகம் அளித்துள்ளார்.