கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.
பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி பயணிகளோடு சென்ற தனியார் பேருந்து கொண்டோட்டி அருகே வந்த போது அதன் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
அதனை கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை துரிதமாக வெளியேற்றினர்.
எனினும் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்து சேதமானது.