தமிழ்நாடு அமைச்சரவை
முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது. மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவது, நிதிஒதுக்கீடு, தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
Prison Break-ம் தொடங்கிவிட்டது
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத் தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் லட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது; மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் தவெக அரசு இருக்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
"ஒரு File திறந்ததுக்கே..."
திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.400 கோடி பறிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது மேசையில் இருந்த 3 கோப்புகளில் ஒன்றை திறந்துவிட்டார்; ஒரேயொரு பைலை திறந்ததற்கே திமுகவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்து உள்ளார்.
Unpopular தவெக அரசு
போதைப்பொருள் கடத்தல் முதல் பா*யல் வன்கொடுமைகள் வரை ஒவ்வொரு நாளும் Unpopular ஆகிக்கொண்டிருக்கும் தவெக அரசு, கைதுகளை வைத்து மக்களை திசைதிருப்பலாம் என்று நினைக்கிறது. அன்பில் மகேஷின் கைது, இந்த Dummy அரசின் தோல்விகளை மறைக்கும் மற்றுமொரு முயற்சி. வன்மையான கண்டனங்கள் என, திமுக ஐடி விங் மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.