முகஸ்டாலின் நியூஸ்தமிழ்24x7
news

"தவெக ஆட்சியில் தமிழகம் அழியப் போகிறது" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தவெக ஆட்சியில் தமிழ்நாடு அழியப் போவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே சென்றுவிட்டதால், இன்னும் கடினமான காலங்களுக்கு பொது மக்கள் தயாராக இருக்கவும் வலியுறுத்தி உள்ளார்.

Azhagiri Arumugam

தனி நபர்களின் ஈகோ

எச்சரிக்கை

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:

ஜி.எஸ்.டி. வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், இந்த ஆட்சியில் தனிநபர்களின் ஈகோவுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில்...

மு.க.ஸ்டாலின் பதிவு

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி? என இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ காட்டக் கிளம்பிவிட்டார்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.