பீகார் மாநிலத்தில், மீண்டும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று, கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி 142 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 115 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும் 122 தொகுதிகளுக்கு 2ஆம் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.