அரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திற்கு வரும் நிதி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வருமானம் தொடர்பான தகவல்களை குறைத்து கூறியிருப்பது கண்டறியப்ப்டடு வழக்கு பதியப்பட்டது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்திற்கு தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.