7 
news

தடுப்புச் சுவரின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை... காரை மெதுவாக இயக்கிய பக்தர்கள்

ஆந்திரா மாநிலம் திருமலை காட் ரோட்டில் தடுப்புச் சுவரின் மீது சிறுத்தை ஓடிச் சென்ற வீடியோ வெளியானது.

Srini Vasan

ஆந்திரா மாநிலம் திருமலை காட் ரோட்டில் தடுப்புச் சுவரின் மீது சிறுத்தை ஓடிச் சென்ற வீடியோ வெளியானது.

தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் மலைப்பாதையில் திருமலைக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது விநாயகர் கோவில் அருகே தடுப்புச் சுவர் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது.

இதனை கண்ட பக்தர்கள் காரை மெதுவாக இயக்கி சிறுத்தையின் அருகே சென்றபோது,

அச்சமடைந்த சிறுத்தை தடுப்புச்சுவரின் மீது ஓடியபடியே வனப்பகுதிக்குள் சென்றது.