vlr 
news

சேறும் சகதியுமாக உள்ள நேதாஜி மார்க்கெட் சாலை

நாற்று நடவு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த வியாபாரிகள்

Web Team

வேலூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நேதாஜி மார்க்கெட்டில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி வியாபாரிகள் மற்றும் அதிமுகவினர் நாற்று நடவு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக சேறும் சகதியுமாக கிடக்கும் சாலையை சீரமைத்து தரக்கோரி மாநகராட்சி நிர்வாகத்துக்கும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வியாபாரிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.