79 
news

கழுத்தை அறுத்த மர்ம நபர்.. பட்டப்பகலில் துணிகரம்..

கழுத்தை அறுத்து கொலை முயற்சி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பெண் அனுமதி.... கொலைக்கான காரணம் என்ன...?

Srini Vasan

கழுத்தை அறுத்து கொலை முயற்சி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பெண் அனுமதி.... கொலைக்கான காரணம் என்ன...?

செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் அருகே பெண் ஒருவரை மர்மநபர் கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரளா என்பவர், கணவர் உயிரிழந்த நிலையில் தனியே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சரளா ஆலத்தூரை அடுத்த பண்டிதமேடு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் சரளாவின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய சரளா, பண்டிதமேடு பேருந்து நிலையம் அருகில் நின்று கூச்சலிட்டுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த சரளாவை மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரளா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.