news

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது

Azhagiri Arumugam

ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 08
ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் மொத்தமாக ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் 5 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் விலை மாற்றமின்றி கிராம் 245 ரூபாய்க்கும் கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 09  
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், மாலையில் ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது.
காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்த நிலையில், மாலையில் ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கு விற்பனை ஆனது.

ஜூலை 10
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

ஜூலை 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.