4 
news

விவசாயிக்கு எமனான பாம்பு.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பாம்பு கடித்ததில், விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பாம்பு கடித்ததில், விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சியவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர்.

இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது.

இதில், மயங்கி விழுந்த விவசாயியை அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.