18 
news

பஹல்காம் பற்றி விளக்க சிறப்பு அமர்வு தேவையில்லை... நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கோரும் எதிர்க்கட்சிகள்

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டத் தேவையில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Srini Vasan

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டத் தேவையில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்த தருணத்தில் அது தேவையில்லை என பாஜக கட்சி வட்டாரத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.

பஹல்காம் தாக்குதல் குறித்து ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாகவும்,

ஆபரேஷன் சிந்தூர் பற்றி முறையாக தொடர் விளக்கங்கள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்த மத்திய அரசு வட்டாரங்கள் எனவே

இதற்காக என்று நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டத் தேவையில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துவள்ளதாக தெரிவித்தன.