12 
news

செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர்.. ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்திய அமெரிக்கரான இவர், சென்னையில் பிறந்து தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். மேலும், பிரபல தொழிலதிபர் டேவிட் சேக்சுடன் பணியாற்றிய இவர், தற்போது ஏ.ஐ.-க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க உள்ளார்.

Srini Vasan

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அமெரிக்கரான இவர், சென்னையில் பிறந்து தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.

மேலும், பிரபல தொழிலதிபர் டேவிட் சேக்சுடன் பணியாற்றிய இவர், தற்போது ஏ.ஐ.-க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க உள்ளார்.

அந்நாட்டு அரசின் ஏ.ஐ. கொள்கையை வடிவமைக்க உள்ள இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.