Odisha 
news

அரசு பொறியாளர் வீட்டின் ஜன்னல் வழியாக பணமழை... ரெய்டு வருவதை அறிந்து பணத்தை அப்புறப்படுத்த முயற்சி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிகாரிகள் ரெய்டு வருவதை அறிந்து பணத்தை அப்புறப்படுத்த முயன்ற அரசு ஊழியர், ஜன்னல் வழியாக 500 ரூபாய் கட்டுக்கட்டான பணத்தை வீசி எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Web Team

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிகாரிகள் ரெய்டு வருவதை அறிந்து பணத்தை அப்புறப்படுத்த முயன்ற அரசு ஊழியர், ஜன்னல் வழியாக 500 ரூபாய் கட்டுக்கட்டான பணத்தை வீசி எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித்துறையில் சாலை அமைப்பு பணி பிரிவின் தலைமை பொறியாளர் Baikuntha Nath Sarangi.

இவருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 கோடி ரூபாய் பணம், தங்க நகை என வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பறிமுதல் செய்யப்பட்டது.