rajini kamal 
news

நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தின் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

Web Team

நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’. திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. இதனிடையே, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
கமல்ஹாசன் வாழ்த்து...

இதுதொடர்பாக, கமல்ஹாசன் ரஜினிகாந்துக்கு, தனது சமூக வலை தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அன்புடை ரஜினி, இரு பனிப் பாறைகள் உருகி வழிந்து, இரு சிறு நதிகளானோம், மீண்டும் நாம் காற்றாய், மழையாய் மாறுவோம்”
இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.