பிரதமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து சமூக தளத்தில் வீடியோ வெளியிட்ட நபரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். முசாபர்நகர் மாவட்டம் புர்காசி அருகே கைகேரி என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயதான விஷால் என்பவரை இது தொடர்பாக கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். வேண்டும் என்றே அவமதித்தல், அமைதியை குலைத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.