நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 25 வது படத்திற்கு தமிழில் ஒரு பெயரும் பிற மொழியில் ஒரு பெயரும் சூட்டப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக மேலும் மூன்று படங்களில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார். திரைத்துறையில் அவரது 25 ஆவது படத்தை அவரே தயாரிக்க உள்ள நிலையில்,
அருவி பட இயக்குநர் அருண் பிரபு எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராசக்தி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.