46 
news

விஜயின் 69-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை.. படப்பிடிப்பு பூஜைக்கான புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விஜயின் கடைசி திரைப்படமாக கூறப்படும் தளபதி 69 என்ற திரைப்படத்தினை எச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.

Srini Vasan

நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விஜயின் கடைசி திரைப்படமாக கூறப்படும் தளபதி 69 என்ற திரைப்படத்தினை எச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ள நிலையில், திரைப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.