19 
news

உடல் எடையை குறைப்பதாக VLCC நிறுவனம் அளித்த சிகிச்சை.. உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்

உடல் எடையை குறைப்பதாக முறையான அனுமதி இல்லாமல் நடைபெற்று வந்த நிறுவனத்தின் மூலம் சிகிச்சை பெற்று பாதிப்புக்கு ஆளான பெண்ணிற்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Web Team

சென்னை அமைந்தகரையில் உள்ள VLCC என்ற தனியார் மருத்துவமனை அளித்த விளம்பரத்தை நம்பி சரண்யா என்பவர் உடல் எடையை குறைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, மருத்துவமனை சார்பில் எலக்ட்ரோ மேக்னட்டோ தெரபி என்ற சிகிச்சை மூலமாக அவருக்கு உடல் எடையை குறைக்க முயன்றனர். அப்போது, சரண்யாவிற்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.