பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்றும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து வெளியிட்டனர்.
இதன்படி...
முதல் கட்ட வாக்குப் பதிவு - நவம்பர் 6
2ஆம் கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 11
வாக்கு எண்ணிக்கை - நவம்பர் 14
முதல் கட்ட தேர்தல், வேட்பு மனு தாக்கல் - அக்.18
2ஆம் கட்ட தேர்தல், வேட்பு மனு தாக்கல் - அக்.21
மொத்த வாக்காளர்கள் - 7.43 கோடி
பெண்கள் - 3.50 கோடி
ஆண்கள் - 3.92 கோடி
மூன்றாம் பாலினத்தவர் - 1,725
முதன்முறை வாக்காளர்கள் - 14.1 லட்சம்
வாக்குச்சாவடிகள் - 90,712
கிராமப்புறங்களில் - 76,801
நகர்ப்புறங்களில் - 13,911
பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.