39 
news

விடுதலை 2’ 1st Day வசூல் எவ்வளவு.. புஷ்பா 2’ OTT ரிலீஸ் - வெளியான அறிவிப்பு.. அஜித் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்

வெற்றி நடைபோடும் விடுதலை 2.. முதல் நாளில் தமிழ்நாட்டில் செய்த வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்.. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே... அஜித் படத்தில் இணைந்த பிரபலம்.. புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடைசி நாள் படப்பிடிப்பு.. விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே.. Bike Ride-ன் போது நடந்த எதிர்பாரா சம்பவம்.. சமுத்திரக்கனியிடம் அஜித் பகிர்ந்த சுவாரசிய தகவல் துல்கர் சல்மானுடன் இணையும் பிரபல வில்லன் நடிகர்.. தெறிக்கப்போகும் தியேட்டர்கள்

Srini Vasan

தளபதி69’ Shoot - பூஜா பகிர்ந்த ஃபோட்டோஅஜித்தின் 'துணிவு' படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் விஜயை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘தளபதி69’. இந்த படத்துக்குப்பிறகு விஜய் அரசியலில் முழு நேர கவனம் செலுத்த இருக்காரு. இதனால தளபதி விஜயின் 69 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில எகிரியிருக்குனே சொல்லலாம்.கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துல பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜூ என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில நடித்து வர, அனிருத் படத்துக்கு இசையமைக்கிறாரு.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருது. அதுல 2024ஆம் ஆண்டுக்கான கடைசி படப்பிடிப்பு மற்றும் #T69 என குறிப்பிட்டு விஜய் மற்றும் தன்னுடைய கால்கள் அடங்கிய ஃபோட்டோவை பதிவு செய்திருக்காங்க. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருது.விடாமுயற்சி’யில் இணைந்த பிரபலம்மகிழ் திருமேனியின் இயக்கத்துல ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக விடாமுயற்சி உருவாகியிருக்கு. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், த்ரிஷா, அர்ஜூன் இணைந்து நடிச்சிருப்பதால திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில அதிகரிச்சிருக்கு.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைச்சிருக்காரு.விடாமுயற்சி படத்தோட ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வந்துட்ருக்கு. சமீபத்துல அஜித் மற்றும் திரிஷா ஷூட்டிங்கில் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியிருந்தது. இந்த நிலையில தற்போது பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா படத்தில் இணைஞ்சிருக்காங்க. தொகுப்பாளர் ரம்யா, அஜித் உடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட லைகா நிறுவனம் இதை உறுதி செய்திருக்கு. புஷ்பா 2’ OTT ரிலீஸ் - வெளியான அறிவிப்புபுஷ்பா 1-ஐ தொடர்ந்து இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் புஷ்பா2 வசூல் சாதனை படைத்துவருது. சுகுமார் இயக்கத்துல மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்புல அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத்பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்துல முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருந்தாங்க. புஷ்பா 2 படம் வெளியாகி 16 நாட்கள் கடந்துள்ள நிலையில இதுவரை 1,508 கோடிக்கும் மேல் வசூலிச்சிருப்பதா படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவிச்சது.இந்தப்படம் திரையரங்குகள்ல இன்னும் வெற்றிநடை போட்டுவரும் நிலையில, புஷ்பா 2 படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதா தகவல்கள் இணையத்துல வலம் வந்துச்சு.இந்த நிலையில புஷ்பா 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான முக்கிய அறிவிப்ப படக்குழு அதிகாரப்பூர்வமா வெளியிட்டிருக்கு. அதன்படி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'புஷ்பா 2' பட ஓடிடி ரிலீஸ் குறித்து பல வதந்திகள் பரவி வந்துட்ருக்கு. படத்தை தற்போது பெரிய திரைகள்ல கண்டு மகிழுங்க. 56 நாட்கள் முடியிறதுக்கு முன்பா எந்த ஓடிடி தளத்திலும் 'புஷ்பா 2' வெளியாகாது'னு தெரிவிக்கப்பட்டிருக்கு சமுத்திரக்கனியிடம் அஜித் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்அஜித் தற்போது விடாமுயற்சி படத்துல நடித்துமுடித்துள்ள நிலையில ’குட் பேட் அக்லி’ படத்துல நடிச்சி வந்துட்ருக்காரு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில பைக் பயணம் பற்றி அஜித் நடிகர் சமுத்திரக்கனியிடம் பேசிய விஷயங்கள சமுத்திரக்கனி பேட்டி ஒன்னுல சொல்லியிருப்பது வைரலாகிட்டுவருது.அதுல அஜித் ஒருமுறை வட மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்துல பைக்கில் பயணம் செய்தபோது அவருக்கு பசி வந்த நிலையில, அருகில் எந்த ஹோட்டலும் இல்லாததால அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பசிக்குதுனு சொன்னாராம். அப்போ அந்த நபர் அஜித்தை அவரோட வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடு கொடுத்ததாகவும், அதற்கு நன்றி கடனா அஜித் அந்த நபருக்கு பணம் கொடுத்தபோது அந்த ஆடு மேய்க்கும் நபர் பணத்தை வாங்க மறுத்துட்டதாகவும் சொல்லியிருக்காரு. மேலும், “இப்படி நாம யார் என்றே தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது இந்த உலகத்தில் நாம எங்கிருக்கோம், நாம யார் என்பதெல்லாம் தெரியவரும். அதனால இதுபோல ஒரு பயணம் பண்ணுங்க சார்”னு அஜித் கூறியதா சமுத்திரக்கனி தெரிவிச்சிருக்காரு.துல்கருடன் இணையும் அசுர வில்லன்பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வந்துட்ருக்காரு. மாநாடு, மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா, சூர்யாவின் சனிக்கிழமை உள்ளிட்ட படங்கள்ல எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில பெரிய வரவேற்பு கிடைச்சிருந்தது. தனது அசுரத்தனமான நடிப்பால தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா இயக்குநர் ஷங்கர் இயக்கத்துல கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐகே, வீர தீர சூரன் 2 படங்களில் நடித்து முடிச்சிருக்காரு. இந்த நிலையில மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்த இயக்கிய நகாஸ் ஹிதாயத் புதியதா இயக்கும் படத்துல எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில நாயகனாக நடிகர் துல்கர் சல்மானும், நாயகியாக பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதா கூறப்படுது. இந்நிலையில மூவரது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில அதிகரிச்சிருக்கு. 6.விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் "விடுதலை" . இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்துல விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிச்சி பாராட்டைப் பெற்றிருந்தாரு. இளையராஜாவின் இசையில பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருந்தது. இந்நிலையில, விடுதலை படத்தை தொடர்ந்து உருவான அதன் அடுத்த பாகமான விடுதலை 2 நேற்று திரையரங்குகள்ல வெளியானது. விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், மஞ்சுவாரியர், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருந்தாங்க. மக்கள் மத்தியில நேர்மறையான விமர்சனங்களை விடுதலை 2 பெற்றுவருது. இந்த நிலையில தமிழகத்துல இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கு. அதன்படி, விடுதலை 2 திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகளவுல ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு.மிஸ்டர் பாரத்" First Look வெளியீடு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தை இயக்கி வந்துட்ருக்காரு. இதற்கிடையே 'ஃபைட் கிளப்' படத்தை தயாரித்திருந்த லோகேஷ், தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வந்துட்ருக்காரு. இந்த நிலையில லோகேஷ் கனகராஜ் தனது 'G Squad' நிறுவனத்தின் சார்பில் "மிஸ்டர் பாரத்" என்ற புதிய படத்தை தயாரிக்கிறாரு. இந்த படத்துல பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் நிரஞ்சன் இந்த படத்தை இயக்க இருக்காரு. மேலும் படத்துல சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்க இருக்காங்க. ஏற்கனவே படம் தொடர்பான புரோமோ வெளியான நிலையில தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்ருக்கு.https://www.youtube.com/embed/fkjzHnSpGbM