news

7 வயது சிறுமி மாயம், பிரபல ரவுடியிடம் விசாரணை நடத்தியது ஏன்?

செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை மீட்க சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல ரவுடியை காவல் நிலையத்திற்கு அழைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி மாயமான வழக்கில் ரவுடியிடம் விசாரணை நடத்தியது ஏன்? விசாரணை வளையத்தில் சிக்கியது எப்படி? நடந்தது என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Azhagiri Arumugam

கடந்த 12ஆம் தேதி முதல்...

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12ஆம் தேதி காணாமல் போன நிலையில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எந்த தகவலும் கிடைக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சிபிசிஐடி டி.எஸ்.பி. கீதா தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் கூடுதலாக நியமிக்கப்பட்டார்.

சிறுமி மாயம்

தொடரும் விசாரணை

சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், சிறுமியின் பாட்டியை பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து பரதன்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரையை அழைத்து சென்று, செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை ஏன்?

சிறுமி காணாமல் போன தேதிக்கு சில நாட்கள் முன்பு அதாவது 9ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் 4 பேரின் மண்டையை ராஜதுரை உடைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததோடு, சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானவர்கள் அளித்த தகவலின் பேரில் அழைத்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம்

நேரில் விசாரணை

இதன் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து ராஜதுரையிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், அதனை தொடர்ந்து சிறுமி படித்த பள்ளிக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் சுடுகாடு அருகே ராஜதுரை சொந்தமாக கட்டி வருவதாக கூறப்படும் புதிய கட்டத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட பின் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு அனுப்பி வைத்தனர்.

நடந்தது என்ன?

இந்த விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள ராஜதுரை மீது திருட்டு, வழிப்பறி மற்றும் கொ* முயற்சி என 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறுமி காணாமல் போன வழக்கிலும் சிக்கியுள்ளரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விழுப்புரம்

இதனிடையே காணாமல் போன சிறுமியின் நிலை என்ன? என்ற தெரியாத நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் நடந்தது என்ன? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.