Goat life 
news

ஆடு ஜீவிதம் படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?... 2024 ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற ஆடு ஜீவிதம் படம்

ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது ஒன்று கூட கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அடுத்தாண்டு அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Team

ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது ஒன்று கூட கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அடுத்தாண்டு அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி, மத மோதலை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி என்ற படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,

பிரித்விராஜின் இயல்பான நடிப்பால் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தணிக்கை முடிந்த படங்களுக்கு மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆடு ஜீவிதம் படம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தணிக்கை சான்றிதழ் பெற்றதால் அடுத்தாண்டு தேசிய விருது பெறும் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.