சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 4 ஆயிரத்து 80 ரூபாய் சரிவை கண்டுள்ளது. தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அக்டோபர் 21
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 7,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,390 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 230 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 30,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
அக்டோபர் 22
ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 19 - ரூ.1,08,560
அக்டோபர் 20 - ரூ.1,07,920
அக்டோபர் 21 - ரூ.1,07,120
அக்டோபர் 22 - ரூ.1,05,880
அக்டோபர் 23 - ரூ.1,04,480 இன்று