கோவை பட்டியலின மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யாத தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
வன்மையாக கண்டிக்கிறேன்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
அனைவரையும் கைது செய்ய வேண்டும்
இந்தச் சூழலில், திமுக, முற்போக்கு அமைப்புகள், மாணவனின் பெற்றோர், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.