இபிஎஸ் பதில் நியூஸ்தமிழ்24x7
அரசியல்

அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானமா? இபிஎஸ் பதில்

தவெக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்கு, ’சிலவற்றை பொது வெளியில் சொல்ல முடியாது,’ என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Azhagiri Arumugam

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி பாதுகாவலர் பெருமாள் சாமியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார். ஈரோடு வில்லரசம்பட்டி லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

தெளிவாக சொல்வோம்...

தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ’அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்படுமா?’என்ற கேள்விக்கு,

எதை எதையெல்லாம் பொது வெளியில் பேச வேண்டும் எதைப் பேச கூடாது என்பது இருக்கிறது, அதனால் சில கருத்துக்களை சொல்ல முடியாது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து செங்கோட்டையன் பேசுவது, அது அவருடைய கருத்து, அப்படி ஒரு சூழல் வரும் போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து தெளிவாக சொல்லுவோம்.

சட்டம்-ஒழுங்கு குறித்து...

பலமுறை சட்டமன்றத்திலும் அறிக்கைகளிலும் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது என பலமுறை கூறிவிட்டேன்.

தமிழக முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி கவனம் செலுத்த வேண்டுமென சட்டமன்றம், பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து இருக்கிறோம்.

சட்டம்-ஒழுங்கு

திராணியற்ற அரசாக இருப்பதால்...

இந்த அரசு அமைந்ததில் இருந்து இன்று வரை கொ*, கொள்ளை திருட்டு வழிப்பறி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முறை தட்டி எழுப்பினாலும் எழுந்தபாடு இல்லை, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதில் திராணியற்ற அரசாக இருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.