அன்பில் மகேஷ் ஆஜர்
மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணைக்காக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
"அன்பில் தப்பி ஓடமாட்டார்"
அன்பில் எங்கும் தப்பி ஓட மாட்டார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான் என, நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. தான் பணம் கேட்டதாகவோ அல்லது வாங்கியதாகவோ ஒரு ஆதாரம் இருக்கிறதா? அரசியல் காரணங்களால் தான் நான் தற்போது சிறையில் இருக்கிறேன் என அன்பில் மகேஷ் தரப்பில் கூறப்பட்டது.
துன்புறுத்தல்
விசாரணை நடத்துங்கள் ஆனால் விசாரணையை துன்புறுத்தலாக மாற்றாதீர்கள் என அன்பில் தரப்பு கூறப்பட்டது. வீட்டு உணவு வழங்கக்கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என அன்பில் தரப்பு கூறவே, அன்பிலுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்படும் என்றும், வீட்டு உணவு கோரிய மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2-4 கிலோ உடல் எடை குறைந்தது
புழல் சிறையில் உணவு சரியாக இல்லாததால் 2-4 கிலோ உடல் எடை குறைந்துவிட்டது என்றும், சிறையில் வீட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்யவும் அன்பில் மகேஷ் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், 5 நாட்கள் போலீஸ் காவல் கோரிய நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.