4 
அரசியல்

பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இடம்பிடித்த வடமாவட்டங்கள்.. கடைசி இடம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்த அன்புமணி

பொதுத்தேர்வு முடிவுகளில் வடமாவட்டங்களே கடைசி இடம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Srini Vasan

பொதுத்தேர்வு முடிவுகளில் வடமாவட்டங்களே கடைசி இடம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காமல், தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாக சாடிய அவர், வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப் படவில்லை என குற்றம் சாட்டினார்.

எனவே, வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை வகுத்து அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.