அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைத் திமுக அரசு இன்னும் பத்து நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் தமிழக பாஜக சார்பில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியிலேயே திட்டத்தில் பெரும்பான்மை பணிகள் நிறைவுற்ற போதும், மீதமுள்ள பணிகளை சரியாக செயல்படுத்தாமல் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.