தனது பிறந்தநாளை ஒட்டி ரத்த தானம் செய்த அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி, சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அண்ணா தொழிற்சங்கம், ஐடி விங் சார்பில் நடந்த முகாமில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்.
இந்நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு நிர்வாகிகளை வரவழைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.