தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மதுப்பழக்கம்தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக அரசுதான் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு எனவும் அவர் கூறினார்.