2 
அரசியல்

"ED ரெய்டுகள் முதலமைச்சருக்கு பயத்தை உருவாக்கியுள்ளது" பழிவாங்கும் நடவடிக்கையாக DVAC சோதனை - எடப்பாடி பழனிச்சாமி

டாஸ்மாக் ரெய்டுகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருப்பதாகவும், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாகவும் எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Srini Vasan

டாஸ்மாக் ரெய்டுகள் தொடர்பாக முதலமைச்சர் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசின் ஏவல்படைகளில் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக கூறினார்.

பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் ரெய்டுகள் மூலம் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என்றும், இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம் என்றும் தெரிவித்தார்.