2 
அரசியல்

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி..

காமராஜரை கேவலப்படுத்திய பிறகு, திமுக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Web Team

காமராஜரை கேவலப்படுத்திய பிறகு, திமுக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல்லில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணியில் சர்ச்சை எதுவும் கிடையாது என்றும், திமுக தலைமையிலான அரசை அகற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.