மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு முதலமைச்சர் நிதிகளை பெற்று தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 44 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெற்றால் அவருக்குதான் பெருமை என்றார்.