கன்னட மொழி பற்றிய பேச்சுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் கமல் ஹாசன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தாம் கூறியது தவறு என்றால் மட்டுமே மன்னிப்பு கேட்பதில் அர்த்தம் உள்ளது என்ற அவர் தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை என இன்னும் நம்புவதாக கூறியுள்ளார்.
இது தமது வாழ்க்கை முறை என்ற அவர், தயவு செய்து பொதுமக்கள் இதில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல் ஹாசன், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் தாம் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித் துறையில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.