நிலமோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் ரூ.37 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு,ஹரியானாவில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தை, ஓங்காரேஸ்வர் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து வதேராவின் நிறுவனம் முறைகேடாக வாங்கியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.