38 
அரசியல்

தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் "RTE சட்டப்படி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்"

கல்வி உரிமை சட்டப்படி, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Srini Vasan

கல்வி உரிமை சட்டப்படி, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகிதம் இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

ஆனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து, மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிக்கையை இன்னும் வெளியிடாததற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.