டாஸ்மாக் முறைகேடு புகார் குறித்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.
மேலும் மூல வழக்குகளை விசாரணை இன்றி ஒழித்துக் கட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.