5 
அரசியல்

அன்புமணியின் பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Web Team

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அன்புமணி தலைமையில் இயங்கும் பாமகவின் தலைமை அலுவலகமான சென்னை, தியாகராய நகர், திலக் தெருவின் முகவரி இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம், அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த தகவல், மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.