உதயநிதி ஸ்டாலின்  நியூஸ்தமிழ்24x7
அரசியல்

எப்போது தான் வாயைத் திறப்பார் முதல்வர்? உதயநிதி சரமாரி கேள்வி

சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார்.

Azhagiri Arumugam

இதுவரை இல்லாமல் இருந்த...

இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி முதல்வர்? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொ*லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சரமாரி கேள்வி

தனி dictionary போடலாம்

ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொ*களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொ*கள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.

நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.

குற்றச் சம்பவங்களை கவர் அப் செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary போடலாம்.

முரண்பட்ட அறிக்கை

தேனியில் காவலர் கொ*லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொ*லப்பட்டார் என்று டம்மி முதல்வரும், பணியில் இல்லாத போது கொ*லப்பட்டார் என்று முதல்வரின் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.

விமர்சனம்

மிரட்டல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அட்ராசிட்டியால் சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Modeல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

உதயநிதி பதிவு