ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 514 ரன்கள் குவிப்பு ரஹ்மானுல்லா ஜத்ரன், செடிகுல்லா அடல் சதம் அடித்தனர்
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 514 ரன்கள் குவித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் குவித்தது.
பிரெண்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 514 ரன்கள் குவித்துள்ளது.
ரஹ்மானுல்லா ஜத்ரன் 113 ரன்களும், செடிகுல்லா அடல் 105 ரன்களும் விளாசினர். 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.