பாகிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், காயத்தையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் அரைசதம் விளாசினார்.
முழங்கையில் பந்து தாக்கி காயமடைந்த போதும், தொடர்ந்து விளையாடிய அவர் 61 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அரைசதம் அடித்ததும் விராட் கோலியின் பிரபலமான சைகையை செய்து ரசிகர்களைக் கவர்ந்தார்.இந்தத் தொடரில் நான்காவது முறையாக 50 ரன்களைக் கடந்துள்ளார்.