Rohit and kohli issue 
விளையாட்டு

"விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார்கள்" அணியிலிருந்து நீக்கம் என்ற தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

Web Team

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

ரோகித், கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் எனவும், ஓய்வு குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.