சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் அனிசிமோவா களம் கண்டார்.. பரபரப்பான இந்த போட்டியில் 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அனிசிமோவா வெற்றி பெற்றார்.