ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3-வது முறை சாம்பியன் பட்டம்
வரலாறு படைப்பதே ஆர்சிபி அணியின் நோக்கம்: பயிற்சியாளர்
ஏலத்தில் அணியை பலப்படுத்த உள்ளோம்: ஆண்டி ஃபிளவர்
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பதே நோக்கம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தங்களுக்கு கடந்த 2 சீசன்களும் மிகவும் சிறப்பானதாக அமைந்ததாகவும், தங்களிடம் தற்போதுள்ள அணியுடனேயே அடுத்த சீசனிலும் களமிறங்கும் அளவுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஏலத்தில் அணியை மேலும் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக தெரிவித்தார்.