12ஆவது புரோ கபடி லீக் போட்டியில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புரோ கபடி லீக் போட்டியில் 6 வெற்றி, 12 தோல்விகளுடன் தமிழ் தலைவாஸ் 10ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.